உள்ளூர் செய்திகள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நடந்த போது எடுத்த படம்.

திருப்பூர் மாவட்டத்தில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக அடையாள அட்டை

Published On 2023-05-13 06:14 GMT   |   Update On 2023-05-13 06:14 GMT
  • மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.
  • 8 பேருக்கு வயது வரம்பு தளர்த்தி உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிக ளுக்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

கண், காது மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளில் உடல் பாதிப்புகளை பரிசோதித்து, அடை யாள அட்டைக்கு பரிந்துரை த்தனர். நேற்றைய முகாமில், மாற்றுத்திறனாளிகள் 45 பேருக்கு புதிதாக அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், அடையாள அட்டை வழங்கினார். 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் 8 பேருக்கு, வயது வரம்பு தளர்த்தி, மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

Tags:    

Similar News