உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-09-24 08:32 GMT   |   Update On 2022-09-24 08:32 GMT
  • ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி தொடங்கி 4ந் தேதி வரை நடக்கிறது.
  • மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

உடுமலை :

உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம்அருகில் உள்ள உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 4ந்தேதி வரை நடக்கிறது.வரும் 27 ந்தேதி பிரம்மச்சாரிணி அலங்காரமும் மாலை 5:30 மணிக்கு உமா நந்தினி பக்தி இன்னிசையும் நடக்கிறது. 28 ந்தேதி சந்திரகாந்தா அலங்காரம் மாலை கமலாலயா நாட்டியப்பள்ளி பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. வியாழக்கிழமை குஷ்மந்தா அலங்காரம் மாலை உமா நந்தினியின் சூழலும் பாடலும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

5-ம் நாள் (வெள்ளிக்கிழமை) ஸ்கந்த மாதா அலங்காரமும் மாலை சொர்ணாலயா நாட்டியாஞ்சலி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந்தேதி கார்த்தியாயினி அலங்காரமும் மாலை ரிதம் இசைப்பள்ளி பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

7-ந்தேதி கால் ராத்திரி அலங்காரமும் மாலை பரதநிகழ்ச்சியும் நடக்கிறது. 8ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 8 ந்தேதி மகா கெளரி அலங்காரமும் மாலை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் காலை 10 மணிக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ தாயார் உள் புறப்பாடு மற்றும் 7.30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிடபிள் டிரஸ்ட் மற்றும் இன்னர் வீல் கிளப்பினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News