உள்ளூர் செய்திகள்
கழிவு நீரில் செல்லும் வாகனங்களை படத்தில் காணலாம்.
குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி
- கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி சாலை ஒற்றக்கண் பாலம் அருகில் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதிக அளவிலான இருசக்கர வாகனங்கள் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பழைய பேருந்து நிலையம், ஊத்துக்குளி செல்வதற்கு இந்த வழியை பயன்படுத்துகின்றனர். சாக்கடை கழிவு நீர் சாலையில் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் நடந்து செல்பவர்களும் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர் . நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே விரைவில் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.