உள்ளூர் செய்திகள்

காங்கயம் மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில் குடிநீர் மேல்நிலை தொட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்த போது எடுத்த படம்.

ரூ.20¼ லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-19 05:52 GMT   |   Update On 2023-05-19 05:52 GMT
  • அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
  • 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

 காங்கயம் :

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.20.30 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.41.53 கோடியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் தண்ணீர் தொட்டி பகுதியில் குடிநீர் மேம்பாட்டுப்பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பதுமன் குளம் மேம்பாட்டு பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்திரெட்டிபாளையம் பகுதியில் ரூ.8 லட்சத்தில் குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், கோட்டைமேடு பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், ஏ.சி.நகரில் ரூ.5.20 லட்சத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டியை திறந்து வைத்தும், காங்கயம் நகராட்சி தண்ணீர் தொட்டி வீதியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.37.49 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணிகளையும், பதுமன் குளத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்து வரும் பதுமன்குளம் மேம்பாட்டு பணிகளையும் ஆய்வு செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காங்கயம் நகராட்சி தலைவர் சூரியபிரகாஷ், ஆணையாளர் வெங்கடேஸ்வரன், காங்கயம் தி.மு.க நகர செயலாளர் வசந்தம் ந.சேமலையப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News