உள்ளூர் செய்திகள்

கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட காட்சி.

கனரா வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.57 லட்சம் கடன் உதவி

Published On 2022-11-20 07:27 GMT   |   Update On 2022-11-20 07:27 GMT
  • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
  • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

அவினாசி :

கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News