ஆசிரியருக்கு கேடயம் வழங்கப்பட்ட காட்சி.
வெள்ளகோவிலில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு
- ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கேடயங்கள் வழங்கப்பட்டது.
- தலைவர் எம்.வி. சண்முகராஜ் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளகோவில்
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஒன்றிய அரசு பள்ளி கல்வி அறக்கட்டளை சார்பில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தலைவர் எம்.வி. சண்முகராஜ் தலைமையில், துணைத்தலைவர் எம்.எஸ். அருண்குமார் முன்னிலையில், வெள்ளகோவில் ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட 10 ம் வகுப்பு, 12 ம் வகுப்புகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற வெள்ளகோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, புதுப்பை அரசு மேல்நிலைப்பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, இலக்கமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளகோவில், துரை ராமசாமி நகர் அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களை பாராட்டி பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கேடயங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் செயலாளர் சி. தண்டபாணி, மகாத்மா காந்தி நற்பணி மன்ற தலைவர் ராஜ்குமார், ஆசிரியர்கள் சி.பாலசுப்ரமணியம், குணசேகரன் ஆகியோர் உடன் சென்றனர்.