உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ்.சின் மகன் வி.ப. ஜெய பிரதீப் சார்பில் மாணவிக்கு உதவித்தொகையை கனிஷ்கா சிவக்குமார் வழங்கிய காட்சி.

ஓ.பி.எஸ்.சின் மகன் வி.ப. ஜெய பிரதீப் சார்பில் மாணவிக்கு உதவித்தொகை - கனிஷ்கா சிவக்குமார் வழங்கினார்

Published On 2023-06-27 17:07 IST   |   Update On 2023-06-27 17:07:00 IST
  • உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார்.
  • பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகை வழங்கினார்.

திருப்பூர்:

ராமநாதபுரம் மாவட்டம் ஆதங்கொத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் மனைவி வனஜாதேவி. இவர்களுடைய மகள் பவானி. இவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பவானி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தந்தை மறைந்த நிலையிலும் பவானி பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்தார். இதை அறிந்த தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் வி.ப.ஜெயபிரதீப் மாணவியிடம் கட்சி நிர்வாகிகள் மூலம் செல்போன் மூலமாக பேசி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பவானியின் மேற்படிப்பிற்காக உதவித் தொகையும் வழங்கினார். இதை ஓ.பன்னீர்செல்வம் அணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட துணை செயலாளரும், கனிஷ்கா பில்டர்ஸ் அண்டு புரொமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனருமான கனிஷ்கா சிவக்குமார் மாணவி பவானியிடம் வழங்கினார்.

அப்போது ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மோ.ராஜசேகர் என்கிற திலீப் மற்றும் மாணவியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர். கல்வி உதவித்தொகையை பெற்றுக் கொண்ட பவானி, தமிழ்நாடு முழுவதும் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியும், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும் வழங்கி சமூக சேவையாற்றி வரும் ஜெயபிரதீப், தந்தையை இழந்த என்னை அழைத்து ஊக்கப்படுத்தி, உதவி செய்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி உள்ளது என்றார்.

Tags:    

Similar News