உள்ளூர் செய்திகள்

பல்லடம், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

பல்லடம் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடக்கம்

Published On 2022-10-26 07:22 GMT   |   Update On 2022-10-26 07:22 GMT
  • பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.
  • முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

பல்லடம் :

பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும். நேற்று சஷ்டி விரதம் ஆரம்பநாள்.

இதன்படி பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர்.

Tags:    

Similar News