உள்ளூர் செய்திகள்

திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே உள்ள சாலையில் மாநகராட்சி சார்பில் மழை நீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றதை படத்தில் காணலாம். 

இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் சாலையோரம் வசிக்கும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-10-11 08:10 GMT   |   Update On 2022-10-11 08:10 GMT
  • தியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
  • கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு வழங்கினார்.

திருப்பூர் :

தீபாவளியை முன்னிட்டு திருப்பூர் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் ஏழை எளிய மக்கள், சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் வருடாவருடம் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் வெட்டையன் கிணறு, துடுப்பதி, திருவாச்சி, கந்தாம்பாளையம், முள்ளம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளை சார்ந்த முன்கள பணியாளர்கள் மற்றும் அங்குள்ள மாற்றுத்திறனாளிகள் சுமார் 150 நபர்களுக்கு இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திராசுந்தரம் நேரடியாக சென்று துடுப்பதி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா அன்பரசு, திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோலி பிரகாஷ், வேட்டையன் கிணறு ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார். இந்நிகழ்வில் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ராஜா முஹம்மது, மற்றும் நிர்வாகிகள் பூர்ணிமா, சதீஷ்குமார் சுரேஷ், ஈஞ்சம்பாளையம் திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News