உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை ஒன்றியத்தில் 21 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு

Published On 2022-07-05 07:29 GMT   |   Update On 2022-07-05 07:29 GMT
  • நடப்பு கல்வியாண்டில் மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது.
  • குழந்தைகளை அதிக கவனத்துடன் கண்காணிக்கவும் வேண்டும்.

உடுமலை :

உடுமலை ஒன்றியத்தில் பள்ளி வளாகத்தில் செயல்படும் 21 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில் மழலையர் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறவுள்ளது. அவ்வாறு சேர்க்கை துவங்கினால் உடுமலை ஒன்றியத்தில் பள்ளி வளாகத்தில் செயல்படும் 21 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பு நடத்தப்படும்.

இது குறித்து சமூக நல அதிகாரிகள் கூறியதாவது:-

அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்பு துவக்குவதற்கான உத்தரவு, குழந்தைகளை வளர்ச்சி திட்ட அலுவலர்களை சென்றடையவில்லை. உத்தரவு கிடைக்கப் பெற்றால் அதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். அதேநேரம் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களைக்கொண்டு பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. குழந்தைகளை அதிக கவனத்துடன் கண்காணிக்கவும் வேண்டும்.இதனால், அங்கன்வாடிகளுக்கு விரைந்து சிறப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். அதேபோல அங்கன்வாடி மையங்களையே வகுப்பறையாக பயன்படுத்த அதற்கான தளவாடப்பொருட்கள் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News