உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
உடுமலை தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
- அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர்.
உடுமலை :
உடுமலை பகுதியில் ஒலி மாசு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பெரும்பாலான வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இது குறித்து புகார்கள் வரவே மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்
இதில் 5 தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து 40 ஆயிரம் ரூபாய் அதிகாரம் விதித்தனர். சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.