உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புதிதாக 349 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

Published On 2023-02-17 10:18 IST   |   Update On 2023-02-17 10:18:00 IST
  • மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந் தேதி தொடங்கி நடைபெற்றது.
  • ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்தது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒன்றிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் கடந்த ஜனவரி 27ந்தேதி ெதாடங்கி நடைபெற்றது.

திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை, அவிநாசி, மடத்துக்குளம், காங்கயம், குண்டடம், ஊத்துக்குளி, குடிமங்கலம், பொங்கலூர்,வெள்ளகோவில், மூலனூர் ஒன்றியங்களில் முகாம் நடத்தப்பட்டது.அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்று, அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன் கேட்டு விண்ணப்பங்கள் அளித்தனர்.

கண், எலும்பு முறிவு, காது - மூக்கு - தொண்டை, நரம்பியல், மனநல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டைக்கு பரிந்துரைத்தனர். ஒன்றிய அளவிலான முகாம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது.

இது குறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை போக்கும்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 27 முதல் இம்மாதம் கடந்த 14ந் தேதி வரை முகாம் நடத்தப்பட்டுள்ளது.

முகாமில் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 349 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்காக 430 விண்ணப்பங்கள், 21வகையான உதவி உபகரணங்கள் கேட்டு 112 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொழில் துவங்குவதற்கான வங்கி கடன்கள் கேட்டு 32 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றார்.

Tags:    

Similar News