உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

Published On 2023-03-12 12:17 IST   |   Update On 2023-03-12 12:18:00 IST
  • கடந்த ஒன்றரை ஆண்டு முன் திருமணம் செய்து கொண்டனர்.
  • மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார்.

திருப்பூர் :

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(30). இவர் திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருடன் உறவினர் பெண் சுபா, (27) என்பவர் வேலை செய்தார். இருவரும் பழகி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருப்பூர் ரங்கநாதபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சில நாட்கள் முன், தமிழ்ச்செல்வன் மனைவியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் வெளியே சென்று விட்டார். இரண்டு நாட்களாக தேடிப் பார்த்த சுபா கணவனை காணாமல் மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் புருஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தமிழ்ச்செல்வன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News