உள்ளூர் செய்திகள்

 இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத்.

அண்ணாமலை கருத்துக்கு இந்து முன்னேற்ற கழக தலைவர் எதிர்ப்பு

Published On 2023-03-07 06:57 GMT   |   Update On 2023-03-07 06:57 GMT
  • திருப்பூரில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாக கூறியிருந்தார்.
  • யாராக இருந்தாலும் தேவையில்லாத தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது.

திருப்பூர் :

திருப்பூர் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் வடமாநிலத்தினர் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள். தமிழக அரசு அனைத்து விதமான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்பாடுகளை செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூரில் காவல்துறையினர் மெத்தனமாக செயல்பட்டதாலும், அதனால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார். அவருடைய கருத்து தவறானது.

வட இந்தியர்கள் விஷயத்தில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்து பெரிய பிரச்சினைகளை தவிர்த்துள்ளனர். மாநில மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் வாழ்வாதாரத்தை காத்துள்ளனர். எனவே யாராக இருந்தாலும் தேவையில்லாத தவறான தகவல்களை தெரிவிக்கக்கூடாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News