உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பல்லடம் ரேஷன் கடைகளில் சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும் - ஊழியர்கள் கோரிக்கை

Published On 2023-09-21 10:02 GMT   |   Update On 2023-09-21 10:02 GMT
  • பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.
  • புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை.

பல்லடம்:

பல்லடம் வட்டாரத்தில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், ரேஷன் கடைகளில் போதுமான சுகாதார வளாக வசதி இல்லாததால் பணியாளர்கள் பெரும் அவதிப்படுவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:-

பல்லடம் பகுதியில் 141 பகுதி நேர, மற்றும் முழு நேர ரேசன் கடைகள் உள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிந்து வருகிறோம். இந்த நிலையில், தற்போது புதிதாக கட்டப்பட்ட 15 ரேசன் கடை கட்டடத்தை தவிர மற்ற கடைகளில் சுகாதார வளாக வசதி இல்லை. இதனால் கடை ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் பெரும் அவதிப்படுகின்றோம்.

அதிலும் பெண்களுக்கு சுகாதார வளாக பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. எனவே அனைத்து ரேசன் கடைகளிலும் சுகாதார வளாக வசதி செய்து தர வேண்டும்.மேலும் பொதுவிநியோக திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும்.நியாய விலை கடைகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகை வருங்கால வைப்பு நிதி கணக்கில் செலுத்த வேண்டும்.

ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் மளிகை பொருட்கள் தரமானதாகவும், காலாவதி ஆகாத பொருட்களாக அனுப்ப வேண்டும். ரேசன் கடைகளில் இணையதள வசதியை மேம்படுத்தி சர்வர் பிரச்சனை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News