உள்ளூர் செய்திகள்

இந்திராநகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்று 5008 வடமாலை சாற்றப்பட்டது, ,மலர்அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்த காட்சி.

அனுமன் ஜெயந்தி விழா

Published On 2022-12-25 04:58 GMT   |   Update On 2022-12-25 05:03 GMT
  • அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
  • 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

பல்லடம் :

பல்லடம் பகுதியில் உள்ள அனுமன் சுவாமி கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அஞ்சலக வீதியில் உள்ள காளிங்க நர்த்தன கோபாலகிருஷ்ண ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அனுமன் சுவாமிக்கு வெண்ணை, சந்தனம், பால், பன்னீர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. திரிசதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும் 1001 முறை இராம நாம பாராயணம் பாடப்பட்டது. பின்னர் அனுமன் சுவாமிக்கு வெண்ணை- சந்தனக் காப்பு ,மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பூர் பல்லடம் சாலை இந்திராநகரில் அமைந்துள்ளஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் நடைபெற்று 5008வடமாலை சாற்றப்பட்டது .இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள பக்தர்களும் பொதுமக்களும் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News