உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி நடக்கிறது

Published On 2023-09-23 06:16 GMT   |   Update On 2023-09-23 06:16 GMT
  • மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
  • 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

திருப்பூர்:

திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருப்பூா் மாவட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.

மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா்.இதில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைகளுக்கான மனுக்கள் வழங்கவும், பின்னா் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் சங்கத்துக்கு ஒருவா் வீதம் தங்களது கோரிக்கைகளை தொகுத்து நேரடியாகவும் வழங்கலாம். மேலும் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைத்திட ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலா்களை கொண்டு வேளாண் உதவி மையமும் இந்த குறைதீா்க்கும் கூட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.

வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News