உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பசுக்களை பராமரிக்க ஒவ்வொரு கோவிலிலும் கோசாலை ஏற்படுத்த வேண்டும் - இந்து முன்னணி வலியுறுத்தல்

Published On 2023-08-25 10:52 IST   |   Update On 2023-08-25 10:52:00 IST
  • கோவிலுக்கு பக்தா்கள் பசுக்களை தானமாக தருவது தொன்றுதொட்டு நடைபெறுகிறது.
  • புனிதமான பசுவை ஒரு பொருளாகக் கருதி இந்து சமய அறநிலையத்துறை அதனை கசாப்புக்கு விற்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது.

திருப்பூர்:

பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய பசுக்களைப் பராமரிக்க ஒவ்வொரு கோவிலிலும் கோசாலை ஏற்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோவிலுக்கு பக்தா்கள் பசுக்களை தானமாக தருவது தொன்றுதொட்டு நடைபெறுகிறது. பசுக்களைப் பராமரித்து அதில் கிடைக்கும் பசுவின் பால், தயிா் ஆகியவற்றை அபிஷேகத்துக்கு பயன்படுத்தி வந்தனா். நாள்தோறும் கா்ப்பகிரகத்தில் சுவாமி அறைக் கதவு திறக்கும்போது பசு தரிசனம் நடைபெற வேண்டும். பல கோவில்களில் பசுவை பராமரிக்க ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஏராளமான மேய்ச்சல் நிலங்கள் இருக்கின்றன.

ஆனால் இந்து சமய அறநிலையத் துறை அதனை சரியாக பராமரிப்பதில்லை. புனிதமான பசுவை ஒரு பொருளாகக் கருதி இந்து சமய அறநிலையத்துறை அதனை கசாப்புக்கு விற்கும் கொடூரமும் அரங்கேறி வருகிறது. இதனை இந்து முன்னணி தட்டிக் கேட்டதால் பசுவை மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு இலவசமாக தந்ததாக கணக்குக் காட்டியுள்ளனா்.

ஆகவே ஒவ்வொரு கோவிலிலும் பக்தா்கள் தானமாகக் கொடுத்த பசுவைப் பராமரிக்க தனி கோசாலை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News