உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

போலீஸ் வாகனம் மோதி சிறுமி பலியான சம்பவம்: ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய 4 பேர் கைது

Published On 2023-07-14 16:12 IST   |   Update On 2023-07-14 16:12:00 IST
  • விபத்தில் காயம் அடைந்த சிறுமியின் தாயார் ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • வீடியோ பதிவுகளின் அடிப்படையில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் -காங்கயம் சாலையில் சில தினங்களுக்கு முன்பு போலீஸ் வாகனம் மோதி சிறுமி திவ்யதர்ஷினி (வயது 8) உயிரிழந்தாள். விபத்தில் காயம் அடைந்த அவருடைய தாயார் ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டிவந்த ஊர்க்காவல் படை வீரர் வீரசின்னானனை பொதுமக்கள் தாக்கினர். இதில் காயம் அடைந்த வீரசின்னான் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் வீரசின்னான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் விபத்து நடந்த அன்று வீரசின்னானை தாக்கியதாக முத்தனம்பாளையத்தை சேர்ந்த சூர்யா (22), நல்லிகவுண்டர் நகரை சேர்ந்த அஜித்குமார் (27), முருகம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ்(42) மற்றும் மண்ணரையை சேர்ந்த ராம்குமார் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நிர்வாகியான ராம்குமார் மீது பழிவாங்கும் நோக்கத்தில் பொய்வழக்கு போட்டுள்ளதாக கூறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.

Tags:    

Similar News