உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பிளாஸ்டிக் கவர்களுடன் கொட்டப்படும் குப்பைகள் கால்நடைகள் பாதிக்கும் அபாயம்

Published On 2022-07-08 06:06 GMT   |   Update On 2022-07-08 06:06 GMT
  • ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன.
  • சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்

உடுமலை :

உடுமலையில் சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்து வருகின்ற நிலையில் சில பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகின்றன. உடுமலை ெரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள பழனி ஆண்டவர் நகருக்கு செல்லும் ரோட்டில் தொடர்ந்து ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதில் பிளாஸ்டிக் கவர்களும் கிடக்கின்றன. அந்த இடத்தில் வரும் கால்நடைகள் அந்த குப்பைகளை கலைத்து உணவை தேடுகின்றன. அப்போது அவை கிடைப்பதை சாப்பிடுகின்றன .அதில் பிளாஸ்டிக் கவர்களையும் மாடுகள் சாப்பிட்டால் மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும். அதனால் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News