உள்ளூர் செய்திகள்

ஆம்புலன்ஸ் வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்ட போது எடுத்த படம்.

பல்லடம் அருகே கரடிவாவி ஊராட்சியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

Published On 2023-09-13 10:45 GMT   |   Update On 2023-09-13 10:45 GMT
  • தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.
  • மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

பல்லடம்:

பல்லடம் வட்டாரம் கரடிவாவி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும். இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு பொது மக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை போக்கும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் ரஞ்சிதா பகவதி கிருஷ்ணன் ஏற்பாட்டின் பேரில் தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து கரடிவாவி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சிதா பகவதிகிருஷ்ணன் கூறியதாவது :-

கரடிவாவி ஊராட்சிபகுதியில் பொது மக்கள் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு பல்லடம்,அல்லது சூலூர் பகுதிகளில் இருந்து தான் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேர வேண்டும்.இதனால் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் பொது மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.மக்கள் சிரமத்தை போக்குவதற்காக தன்னார்வலர்கள் உதவியுடன் ரூ.8 லட்சம் மதிப்பில் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் கரடிவாவி மற்றும் அருகே உள்ள ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை அளிக்கப்படும். சாலை விபத்தில் காயம் அடைபவர்கள் மற்றும் பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு செல்வோருக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. அதே சமயம் கரடிவாவியில் இருந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு பல்லடம்,திருப்பூர்,கோவை பகுதிக்கு செல்வோரிடம் தூரத்திற்கு ஏற்ப குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும்.

இது லாபம் நோக்கம் இல்லாத முற்றிலும் மக்கள் சேவை பணியாகும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 9171080108 என்ற செல்போன் எண்ணிற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். விரைவில் அமரர் ஊர்தி சேவை தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News