உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை - பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு

Published On 2023-09-17 11:23 IST   |   Update On 2023-09-17 11:23:00 IST
  • காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்
  • மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம்.

தாராபுரம்: 

காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை வருமாறு-

வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிக்க அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.

தொடர் மழையால் ஒரு சில இடங்களில் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும்.

பழுதடைந்த சுற்றுச்சுவர் பகுதிகளில் சுற்றுவேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழையால் வகுப்பறை, கழிப்பறை பாதிக்கப்பட்டிருப்பின் அவற்றை பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது அவசியம். அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா, மின்கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளங்கள், திறந்தவெளிகிணறுகள், கழிவுநீர் தொட்டிகள் இருந்தால், அவை மூடப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். பருவகால நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News