உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
தாழ்ப்பாள் போட்டதால் கதவை திறக்க முடியாமல் வீட்டிற்குள் தவித்த குழந்தை - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் உள்கதவை தாழ்ப்பாள் போட்ட குழந்தை.
- திருப்பூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கே.பி.பி. கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் கனிஷ்கா என்ற குழந்தை வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் உள்கதவை தாழ்ப்பாள் போட்டாள். இதையடுத்து கதவை திறக்க முடியாமல் தவித்துள்ளாள்.
இது குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கதவு தாழ்ப்பாளை உடைத்து குழந்தையை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.