மனு அளித்தபோது எடுத்த படம்.
தேங்காய் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மனு
- கிழக்கு வடக்கில் விவசாயிகளுக்கும், மேற்கு பகுதியில் கமிஷன் மண்டிகளும், கிழக்கு - தெற்கு பகுதியில் சிறு வியாபாரிகளுக்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது.
- உழவர் சந்தைக்கு சென்று வரும் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் வியாபாரம் பாதிக்கப்படும்.
திருப்பூர்:
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். கிழக்கு வடக்கில் விவசாயிகளுக்கும், மேற்கு பகுதியில் கமிஷன் மண்டிகளும், கிழக்கு - தெற்கு பகுதியில் சிறு வியாபாரிகளுக்கும் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் வடக்கு ஓரமாக பாதை விடப்பட்டுள்ள இடத்தில் தேங்காய் கடை அமைக்கிறோம் என்று செட் அமைக்கப்படுகிறது.இந்த செட் அமைப்பதால் உழவர் சந்தைக்கு சென்று வரும் விவசாயிகளுக்கு மழைக்காலங்களில் வியாபாரம் பாதிக்கப்படும். எனவே தேங்காய் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைக்க ஏதுவாக வேலைகள் நடைபெறுவதை முழுமையாக தடுத்து நிறுத்திட வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.