கோப்புபடம்
திருப்பூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- காய் மற்றும் பழங்கள், விதைகள் போன்ற விவசாய பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
தாராபுரம்:
தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது43) .இவரது மனைவி சகிலாபானு (38) . இவர்களின் 15 வயது மகள் தாராபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு கடந்த 2 தினங்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியின் பெற்றோர் மருத்துவரிடம் அழைத்து செல்லாமல், காளிபாளையத்தில் உள்ள ஒரு மருந்து கடையில் உடல் நிலை சரி இல்லை என்று கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி மாணவிக்கு கொடுத்துள்ளனர்.
அதை சாப்பிட்ட மாணவி சுமார் 1 மணி நேரத்தில் வாந்தி எடுத்து மயக்க நிலைக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் உடனடியாக 108-ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாணவியை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி உட்கொண்ட மருந்து பெட்டியை கண்ட மருத்துவர்கள் இது ஏற்கனவே 2020-ல் காலாவதியான மருந்து எனக் கூறியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தாராபுரம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மருந்து கடைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து காலாவதியான மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தாராபுரம் பகுதியில் காலாவதியான மாத்திரை சாப்பிட்ட மாணவி பாதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.