உள்ளூர் செய்திகள்

அவினாசி பாளையத்தில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அவினாசிப்பாளையத்தில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2023-07-15 16:17 IST   |   Update On 2023-07-15 16:17:00 IST
  • தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று தேங்காயை உடைத்து போராட்டத்தை நடத்தினார்கள்.
  • போராட்டத்தின் போது பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்லடம்:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசிபாளையத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.நேற்று 10-வது நாளக போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அரசு தங்களை அழைத்து பேச வேண்டும், தங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று தேங்காய்க்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்று தேங்காயை தரையில் உடைத்து நூதனமான போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் கொடுவாய் அருகே உள்ள எல்லப்பாளையம் புதூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தங்களது கோரிக்கைகள் குறித்து பாடலாக பாடி கவனயீர்ப்பாக போராட்டத்தை நடத்தினார்கள். இதனை ஆசிரியர் அருணாச்சலம், ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன், இணை ஆசிரியர்கள் மணி, பரமசிவம் ஆகியோர் முன்னின்று நடத்தினார்கள். மேலும் இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர் பாலசுப்பிரமணிய குமார ரத்தின வேணாடுடையார், களஞ்சியம் பொன்னுச்சாமி, ஜி.பி.எஸ் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News