உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பட்டுக்கூடு விலை சரிவால் விவசாயிகள் பாதிப்பு

Published On 2023-03-31 11:42 GMT   |   Update On 2023-03-31 11:42 GMT
  • மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாகிறது.

உடுமலை :

தமிழகத்தில் 22 ஆயிரத்து 269 விவசாயிகள், பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். பட்டுப்புழுவிற்கு உணவான மல்பெரி 44 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் தினமும் சராசரியாக 10 ஆயிரம் கிலோ பட்டுக்கூடு உற்பத்தியாகிறது. பட்டு வளர்ச்சித்துறையால் அமைக்கப்பட்டுள்ள தர்மபுரி, ஓசூர், கோவை, சேலம், தேனி, வாணி யம்பாடி, உடுமலை, ராசிபுரம், ஸ்ரீ வில்லிபுத்தூர், சிவகங்கை ஆகிய அங்கா டிகள் மற்றும் கர்நாடக மாநில மார்க்கெ ட்களில் விவசாயிகள் விற்று வருகின்றனர்.கடந்த மாதம் ஒரு கிலோ பட்டுக்கூடு 850 ரூபாய் வரை விற்று வந்த நிலையில் தற்போது கிலோவுக்கு 300 ரூபாய் வரை குறைந்து சராசரியாக ரூ. 450 முதல் 540 வரை மட்டுமே விற்பதால் விவசாயிகள் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் செல்வராஜ் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், உற்பத்தி பாதித்துள்ள நிலையில் பட்டுக்கூடுகளுக்கான விலையும் சரிந்துள்ளது.கர்நாடகமாநிலத்தில் தமிழகத்தை விட 100 ரூபாய் வரை கூடுதல் விலைஉள்ளதோடு, அங்குள்ளஅரசு கிலோவுக்கு ரூ.50 ஊக்க த்தொகையும் வழங்குகிறது. தமிழகத்தில் வியாபாரிகள், நூல் உற்பத்தி நிலையங்கள் சிண்டிகேட் காரணமாக விலை குறைக்கப்ப ட்டுள்ளது. விலை குறைவை தடுக்க அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News