உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

விவசாயிகளுக்கான உதவித்தொகை-புதிய உத்தரவு

Published On 2023-03-02 07:46 GMT   |   Update On 2023-03-02 07:46 GMT
  • ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தாராபுரம் :

விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. 4 மாத இடைவெளியில் மூன்று தவணைகளில் இத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 13வது தவணையாக 2,000 ரூபாயை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுகின்றனர். திட்டத்தின் கீழ் ஏராளமான போலி விவசாயிகள் பயன் பெறுவதாக எழுந்த புகாரையடுத்து சரியான விவசாயிகளுக்கு மட்டும் நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.இதனால் சம்மந்தப்பட்ட விவசாய நிலம் யார் பெயரில் உள்ளதோ அவர்களது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை விடுவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி இடைப்பட்ட நாட்களில் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பட்டியல் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து வேளாண்மை துறையினர் கூறுகையில், விவசாய நிலம் வைத்துள்ள பலர் கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர். தங்களது பெற்றோர் பெயரில் உள்ள நிலத்துக்கு வாரிசுகள் சொந்தம் கொண்டாடும் போது, எந்த வாரிசின் பெயரில் நிலம் உள்ளதோ அவரது வங்கிக் கணக்கிற்கு தான் உதவித் தொகை அனுப்பப்படும். இதனை விண்ணப்பதாரர்களுக்கு தெளிவுப்படுத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News