உள்ளூர் செய்திகள்

 கூட்டம்  நடைபெற்ற காட்சி. 

அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம்

Published On 2023-06-10 11:52 GMT   |   Update On 2023-06-10 11:52 GMT
  • சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
  • வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது

அவினாசி :

அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் கூட்ட அரங்கில் தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல் படிநமக்கு நாமே திட்டம் அல்லது பொது நிதி மூலம் செப்டிக் டேங்க் வாகனம் வாங்கி சூளை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர்மற்றும் பேரூராட்சி பகுதியில் கழிவறை கழிவுநீர் ஆகியவற்றை அப்புறப்படுத்தலாம். மேலும் அவினாசி பேரூராட்சி பொதுமக்கள்பயன்பாட்டில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் சுத்திகரிப்பு செய்ய சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை வருவாய் துறையிடம் கேட்டு பெறுவது என்று தலைவர் தனலட்சுமி கூறினார்.

இதையடுத்துவார்டு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், சூளை பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீரை வெளியேற்றவேண்டியது குடிசை மாற்று வாரியத்தின் பணியாகும். நமது பேரூராட்சிக்கு தேவையான குப்பை வண்டி வாங்க சொல்லி பல கூட்டங்களில் வலியுறுத்தியும் அதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.

திருமுருகநாதன் பேசுகையில்,அவினாசி வ .உ. சி. பூங்காவில் அமைக்கப்பட்டு வரும்டேங்க் பணி முடிய காலதாமதம் ஆகி வருகிறது. அந்த பணி எப்போது முடியும் என்றார். தலைவர் பேசுகையில், டேங்க் கட்டும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீக்கிரம் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளது என்றார்.

Tags:    

Similar News