உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

உடுமலையில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் ரத்து

Published On 2023-09-21 16:05 IST   |   Update On 2023-09-21 16:05:00 IST
  • நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதால் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.
  • இச்செய்தியை உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.

உடுமலை:

உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமூர்த்தி நகர் தலைமை நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாலும் முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவுகளை சரி செய்ய வேண்டி உள்ளதாலும் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் உடுமலை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News