உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தீபாவளி பண்டிகை - திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2022-10-21 09:33 GMT   |   Update On 2022-10-21 09:33 GMT
  • தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
  • வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் :

தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து வெளிமவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதற்காக திருப்பூரில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து 400 சிறப்பு பஸ்கள் தொடர்ச்சியாக இயக்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அதிகாரி–ள் தெரிவித்தனர்.கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகை–யில் மாந–க–ரில் இன்று வாகன நெரிசலை பார்த்து போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து பழனி, திண்டுக்கல், மதுரை, தேனி வழித்தட பஸ்கள், தென்மாவட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, கோவை வழித்தடங்களில் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், திருவண்ணாமலை, சென்னை பஸ்களும், அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், ஊட்டி, சத்தியமங்கலம், ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் பஸ்களும் இயக்கப்படுகிறது.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து நகர பஸ்கள், அவினாசி, பெருமாநல்லூர், ஊத்துக்குளி, காங்கயம், கொடுவாய், பல்லடம், சோமனூர் வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

Tags:    

Similar News