உள்ளூர் செய்திகள்

கல்வி சுற்றுலாவை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தொடங்கி வைத்தார். அருகில் மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும் பலர் உள்ளனர்.

திருப்பூரில் இருந்து கல்விச்சுற்றுலா சென்ற மாற்றுத்திறனாளி குழந்தைகள்

Published On 2023-03-21 05:41 GMT   |   Update On 2023-03-21 05:41 GMT
  • மன வளர்ச்சி குன்றிய 34 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர், இரண்டு பஸ்ஸில் சுற்றுலா புறப்பட்டனர்.
  • கலெக்டர் வினீத் கொடி அசைத்து பயணத்தை துவக்கிவைத்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் நேற்று கல்விச்சு ற்றுலா அழைத்துச்செ ல்லப்பட்டனர். பாரதி வித்யாஸ்ரமத்தை சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய 34 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்,இரண்டு பஸ்ஸில் சுற்றுலா புறப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் வினீத் கொடி அசைத்து பயணத்தை துவக்கிவைத்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

குழந்தைகள், கோவை வ.உ.சி., பூங்கா உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டு, மாலையில் மீண்டும் திருப்பூர் திரும்பினர்.

Tags:    

Similar News