உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் ஓட்டுச்சாவடி மறு சீரமைப்பு குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்

Published On 2022-09-14 13:48 IST   |   Update On 2022-09-14 13:48:00 IST
  • ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
  • 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் :

உடுமலை, மடத்துக்குளம் தொகுதியில் பழுதடைந்த ஓட்டுச்சாவடிகளை மறு சீரமைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வரைவு ஓட்டுச்சாவடிகள் குறித்து பட்டியல் தயாரித்துள்ளனர்.

மடத்துக்குளம் தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் மாற்றம் இல்லை. உடுமலை தொகுதியில் 21 ஓட்டுச்சாடிகள் மறு சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து, அரசியல் கட்சியினர் பங்கேற்ற கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News