உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டித்து நடக்கும்உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்க வேண்டும்

Published On 2023-08-18 10:40 GMT   |   Update On 2023-08-18 10:40 GMT
  • தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.
  • திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

திருப்பூர்:

நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய பா.ஜனதா அரசையும், அதற்கு துணை போகும் தமிழக கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 20-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வருகிற 20-ந் தேதி திருப்பூர் குமரன் சிலை முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் திரளானவர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மருத்துவர் அணி அமைப்பாளர் கோபு, இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி, மாவட்ட, மாநகர, தொகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News