உள்ளூர் செய்திகள்

பள்ளி வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததுருப்பதை படத்தில் காணலாம்.

பல்லடம் அருகே பள்ளி வகுப்பறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது - மாணவர்கள் இல்லாததால் விபத்து தவி்ர்ப்பு

Published On 2022-09-10 06:06 GMT   |   Update On 2022-09-10 06:06 GMT
  • சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
  • சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

பல்லடம் :

பல்லடம் வட்டாரம் செம்மிபாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம் சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென பள்ளி கட்டட மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆசிரியரின் மேஜை மீது விழுந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கூரை சிமெண்ட் பூச்சு சிறிது விழுந்துள்ளது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை. ஆகவே யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.பழுதான கட்டடத்தின் பட்டியலில் இந்த கட்டடம் உள்ளது. 6 மாதத்துக்குள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை மாணவர்களை தற்காலிகமாக அருகிலுள்ள உயர்நிலை பள்ளி கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News