உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க.வினர்.
பல்லடத்தில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்:
நெய்வேலியில் என்எல்சி., நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அன்புமணிராமதாசு கைது செய்யப்பட்டார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் பஸ் நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் கிரிஸ் சரவணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மணிகண்ணன், நந்தகோபால்,மாதப்பூர் சாமிநாதன்,புரட்சிமணி,பிரகாஷ்,மல்லிகா,முன்னவன்,மற்றும் மாவட்ட,ஒன்றிய,நகர நிர்வாகிகள்,தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.