உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

தண்ணீரை சேமிக்க சொட்டுநீர் பாசனத்தில் வாழை சாகுபடி

Published On 2022-07-28 05:01 GMT   |   Update On 2022-07-28 05:01 GMT
  • ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
  • வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

குடிமங்கலம் :

உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் அதிக நீர்வளம் மிகுந்த பகுதிகளில் மட்டும் வாழை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இச்சாகுபடியில்வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நேரடி பாசன முறையில் அதிக தண்ணீர் தேவைப்படும்.

இதனால் தோட்டக்கலைத்துறை வழிகாட்டுதல்படி, சொட்டு நீர் பாசனம் அமைத்து வாழை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது பரவலாக நேந்திரன் ரக வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.ஆடி மாத காற்று துவங்கியுள்ளதால் வாழை மரங்களை பாதுகாப்பதற்கான பணிகளையும் விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வாழை சாகுபடியில் கன்று நடவு செய்ததும், உயிர் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மேலும் வாரம் ஒரு முறை கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.தண்ணீர் பாய்ச்ச தொழிலாளர்கள் தேவையும் அதிகம் இருந்தது. ஆனால் சொட்டு நீர் பாசன முறையில், வாழைக்கன்றுகளுக்கு அருகிலேயே தண்ணீரை நேரடியாக பாய்ச்ச முடியும்.இதனால் 40 சதவீதத்துக்கும் அதிகமாக தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

சொட்டு நீர் பாசனத்தில் தினமும் 2 மணி நேரம் பாசனம் செய்தால் போதும். தொழிலாளர் தேவையும் இல்லை.உரங்களை தண்ணீரில் கரைத்தும் வாழை மரங்களுக்கு வழங்கலாம். போதிய இடைவெளி விட்டு, வாழைக்கன்றுகளை நடவு செய்வதால் களைகளை அகற்றுவதும் எளிதாக மாறியுள்ளது.சொட்டு நீர் பாசனத்துக்கு தோட்டக்கலைத்துறை வாயிலாக முழு மானியம் வழங்க வேண்டும். மேலும், திசு வாழை ரக கன்றுகளை தோட்டக்கலை பண்ணை வாயிலாக உற்பத்தி செய்து வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

Tags:    

Similar News