உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

விபத்தில்லா தீபாவளி குறித்து அவினாசியில் தீயணைப்புத்துறையினா் விழிப்புணா்வு

Published On 2023-11-06 10:55 GMT   |   Update On 2023-11-06 10:55 GMT
  • காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
  • மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது

அவிநாசி:

அவிநாசியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்து, மாசில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் தன்மையுடைய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

மேலும் மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அமைதி காக்க வேண்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினா்.

இதைத்தொடா்ந்து தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவது, பட்டாசுகளை வெடிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கினா்.

Tags:    

Similar News