காங்கயம் நகராட்சி ஆணையர் பாராட்டு
- காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காங்கேயம் :
திருப்பூர் மாவட்டம்காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன் ,தலைவர் சூரிய பிரகாஷ் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தனர்.
அப்போது பெரியார் நகர் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு சமுதாயக்கூடம், கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டுகோள் விடுத்தனர் .அவற்றை செய்வதற்கு ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமார் முன் வருவதாக தெரிவித்தார்.
இதை அறிந்த நகராட்சி ஆணையாளர் வெங்கடேசன் சமுதாயப் பணிகள் ஈடுபடும் ஆற்றல் அறக்கட்டளையை சமுதாய கூடம்கட்டும் பணியை மேற்கொள்ள கேட்டுக்கொண்டார். மேலும் அறக்கட்டளை நிறுவனர் அசோக்குமாரின் சமுதாயப் பணிக்கு பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார். நகராட்சி தலைவர் சூரிய பிரகாசும் பாராட்டு தெரிவித்தார். அப்போது வார்டு கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும் சந்தனகுமார் உடனிருந்தனர்.
ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு, திருப்பூர் ,நாமக்கல் மற்றும் திருச்சி ,விழுப்புரம் மாவட்டங்களில் பழுதடைந்த நூற்றுக்கும் மேற்பட்டஅரசு பள்ளிகளை சீரமைத்து ஒப்படைத்து வருகிறது.மேலும் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 230 மருத்துவ முகாம்களை பல்வேறு கிராமங்களில் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.