உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்த படம்.

பல்லடத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-04 16:23 IST   |   Update On 2023-11-04 16:23:00 IST
  • ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

பல்லடம்:

தமிழ் நாட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5-ந்தேதி வரை ஊழல் தடுப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில் ஊழல் தடுப்புத்துறை துணை கண்காணிப்பாளர் தட்சிணாமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் ஆய்வாளர் சசிலேகா தலைமையில் பல்லடம் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற ஊழல் மறுப்போம், தேசத்தை காப்போம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி பஸ் நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அரசு மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. இதில் பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

Tags:    

Similar News