உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என அறிவிப்பு

Published On 2023-04-08 11:13 GMT   |   Update On 2023-04-08 11:13 GMT
  • ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது.
  • உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும்.

திருப்பூர் :

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை 6.5 சதவீதமாக தொடருவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

அமெரிக்க மத்திய வங்கி கடந்த 15 நாட்களில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் இதை பின்பற்றும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ரெப்போ விகிதம் உயர்த்தப்படவில்லை. இதன்மூலமாக வர்த்தக முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியை ஒப்பிடுகையில் பெரும்பாலான மத்திய வங்கிகள் பணவீக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், ரிசர்வ் வங்கி இரண்டுக்கும் இடையே நல்ல சமநிலையை உருவாக்கி வளர்ச்சிக்கு முதன்மை அளிக்கிறது. அதிகரித்து வரும் முதலீடு மேலும் உற்பத்தி மற்றும் வினியோகத்தை எளிதாக்க வழிவகுக்கும். அடுத்த 2 மாதங்களில் பணவீக்கம் குறையும். கடந்த ஆண்டு பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகத்தின் பின்னணியில் பெரிய சாதனையாகும். ரெப்போ விகிதம் அதே நிலையில் தொடர்வது வர்த்தக வளர்ச்சிக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News