உள்ளூர் செய்திகள்

நொய்யல் பொங்கல் திருவிழா குறித்து ஆலோசனை

Published On 2022-12-09 12:43 IST   |   Update On 2022-12-09 12:43:00 IST

திருப்பூர் : 

நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் நொய்யல் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த விழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நிட்மா அலுவலகத்தில் நடந்தது.

மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிட்மா தலைவர் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் அமைப்பு செயலாளர் பொறியாளர் சண்முகராஜ், சலங்கையாட்ட குழுவை சேர்ந்த குமார், அருணாசலம், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:- நொய்யல் கரையில் பாரம்பரிய வழக்கப்படி தை பொங்கல் விழா ஜனவரி 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. காலை 6 மணி முதல்7மணிவரை 3000 பொங்கல் வைக்கப்படும்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்கின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து நடக்கும் விழாவில் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 17-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News