உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை - நுகர்வோர் அமைப்பு புகார்

Published On 2023-04-01 04:45 GMT   |   Update On 2023-04-01 04:45 GMT
  • கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர்.
  • கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும்.

பல்லடம் :

பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான இல்லத்தரசிகள், சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார்கள் வருகிறது.

எனவே திருப்பூர் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க வேண்டும். சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட ஏஜென்சியின் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் சிலிண்டர் எடுத்துச் செல்லக்கூடாது. 5 வருடங்களுக்கு ஒருமுறை சிலிண்டர் வால்வு, கேஸ் டியூப் பரிசோதிப்பதற்காக ரூ.230 கட்டணம் என்பதை ரூ.200 ஆக குறைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News