உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

Published On 2022-10-29 15:58 IST   |   Update On 2022-10-29 15:58:00 IST
  • கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா்.
  • மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் முறைகேடாக இயங்கும் கல்குவாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

திருப்பூா் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கோடங்கிபாளையத்தில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த தனியாா் கல்குவாரிக்கு புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையா் ரூ.10.40 கோடி அபராதம் விதித்துள்ளாா். அபராத தொகையை தவணை முறையில் செலுத்த அவகாசம் அளித்தும், முழு அபராத தொகையை செலுத்துவதற்கு முன்பாகவே மூடப்பட்ட குவாரியை உடனடியாக திறந்து இயக்க சுரங்கத் துறை ஆணையா் அனுமதி அளித்துள்ளாா்.

முழு அபராத தொகையை செலுத்தும்வரை சம்பந்தப்பட்ட குவாரி இயங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும், சட்டவிரோதமாக செயல்படும் குவாரிகளுக்கு தடை விதிப்பதுடன், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News