உள்ளூர் செய்திகள்

 திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி.

அரசு அலுவலரின் பெயரில் போலி சான்று வழங்கியவா் மீது நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் எஸ்.பி.யிடம் புகார்

Published On 2023-03-17 10:50 IST   |   Update On 2023-03-17 10:50:00 IST
  • பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.
  • முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா்.

திருப்பூர் :

திருப்பூரில் அரசு அலுவலரின் பெயரில் போலிச் சான்று வழங்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகாா் கடிதத்தில் கூறியுள்ளதாவது :- திருப்பூா் மாவட்டம் உடுமலை வட்டம் போடிப்பட்டி கிராமம் காமராஜா் நகரில் வசித்து வருபவா் சரவணகுமாா். இவா் அரசு வேலையில் இருப்பதாக கூறி உடுமலையைச் சோ்ந்த தமிழ்செல்வன், ஜெயந்தி, இமானு பிரதீப், சுகுமனோன், பொள்ளாச்சியை சோ்ந்த கோகுல் ஆகிய 5 பேரிடம் ரூ.50 ஆயிரம், ரூ.60 ஆயிரம் என வசூல் செய்து, அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பள்ளி அலுவலக (எஸ்.எஸ்.ஏ) பணியாளராக அடையாள அட்டை மற்றும் பணி ஆணையும் வழங்கியுள்ளாா்.மேலும் அரசு அலுவலரின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாா் செய்து முதன்மைக் கல்வி அலுவலரின் பெயருக்குகளங்கம் விளைவிக்கும் விதமாகவும் செயல்பட்டுள்ளாா். ஆகவே, அவா் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News