உள்ளூர் செய்திகள்

குட்டியை ஈன்ற காட்டு யானை.

உடுமலை சின்னாறு வழிதடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை

Published On 2022-07-08 17:11 IST   |   Update On 2022-07-08 17:11:00 IST
  • சாலையின் இரு புறமும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானை நடவடிக்கைகளை கண்டு செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.
  • கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து அது வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டு செல்லும் வரை கரிமுட்டியில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

உடுமலை :

கேரள மாநிலம் மறையூர் பகுதியில் உள்ளது சின்னார் வனவிலங்கு சரணாலயம். இங்கு காட்டு யானை, புலி, காட்டு மாடு ,காட்டு மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆனது உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் பாதையில் உள்ளது. மலைச்சாலையான இந்த வழியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த வழித்தடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணியளவில் ஆலம்பட்டி0 சம்பக்காட்டுக்கும் இடையே ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. சாலையை மறித்தபடி காட்டுயானை நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வன பகுதிகள் செல்லும் வரை காத்திருப்பது என முடிவு செய்தனர் .இந்நிலையில் அந்த கர்ப்பிணி யானை குட்டியை ஈன்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் வாகனங்களை அந்த வழியாக இயக்கத் தடை விதித்தனர். காலையில் யானை தனது குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது.

அதுவரை சாலையின் இரு புறமும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானை நடவடிக்கைகளை கண்டு செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து அது வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டு செல்லும் வரை சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் கரிமுட்டியில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News