உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வெள்ளகோவிலில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளையன் சிக்கினான்

Published On 2022-10-09 11:17 IST   |   Update On 2022-10-09 11:17:00 IST
  • விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.
  • வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் கண்ணனை தேடி வந்தனர்

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2017 ம் ஆண்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வந்த வெள்ளகோவில், திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கண்ணன் (40) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் 14ந்தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி கண்ணன் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தார்.

அதன் பேரில் காங்கயம் போலீஸ் துணை சூப்பிரெண்ட் பார்த்திபன் உத்தரவின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணனை தேடி வந்தனர். இந்நிலையில் கொளைளயன் கண்ணனை நேற்று மூலனூர் அருகே போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Tags:    

Similar News