பல்லடத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு
- இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது.
- ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது.
பல்லடம் :
பல்லடம் - தாராபுரம் ரோட்டில் உள்ள கள்ளிப்பாளையம் அரிசன காலனியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 40). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் ஜெகநாதன்( 37). இவரது உறவினர்கள் முருகன் (40), முருகன் மகன் பிரதீப்( 22). இந்த நிலையில் அய்யாசாமி மற்றும் ஜெகநாதன் தரப்பினருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இரு தரப்பினர் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கைகலப்பு நடந்துள்ளது. அப்போது ஜெகநாதன் தரப்பினர் அய்யாச்சாமியை இரும்பு கம்பி மற்றும் அரிவாளால் தாக்கியதாக தெரிகிறது. இதில் அய்யாசாமியின் வலது கையின் கட்டை விரல் வெட்டுப்பட்டது.
மேலும் அவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அய்யாசாமி காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெகநாதன், முருகன் மற்றும் பிரதீப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இது குறித்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள். காயம் அடைந்த அய்யாசாமி திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.