உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பனை மரங்களை வெட்டி கடத்திய கும்பல்

Published On 2023-04-01 04:51 GMT   |   Update On 2023-04-01 04:51 GMT
  • பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
  • வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

பல்லடம் :

பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரக்கூடியது. நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை மரங்களை வெட்ட தடை விதித்துள்ளது. மிகவும் அத்தியாவசிய தேவை கருதி வெட்ட கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு அனுமதி பெற்ற பின்பு பனை மரங்களை வெட்ட வேண்டும். இந்த நிலையில் பல்லடம் அருகே கண்டியன் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாரிபட்டி பகுதியில் சுமார் 20 பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. குறிப்பாக நீரோடையில் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது. அருகில் இருந்த காட்டுப் பகுதியில் சுமார் 15 பனைமரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

இது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் உரிய அனுமதியின்றி மரம் வெட்டப்பட்டது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News