உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Published On 2022-10-01 12:51 IST   |   Update On 2022-10-01 12:53:00 IST
  • பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா இளைஞரணி சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதற்கு மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமை தாங்கி பேசினார். இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் சிவசங்கரி முன்னிலை வகித்தார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் மற்றும் பா.ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியம், பொருளாளர் நட்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதன் பின்னர் இளைஞரணி மாநில தலைவர் ரமேஷ் சிவா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநில இளைஞரணி சார்பில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளோம். பா.ஜ நிர்வாகிகள் வீடுகள், நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்டவைகளை சேர்ந்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏராளமான கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திற்கு அதிகமான வங்கி கடன் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன் உதவிகள் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் பெருகும். ஆர்.எஸ்.எஸ். பேரணி என்பது எப்போதும் நடந்து வரக்கூடிய ஒரு நிகழ்வாகும். இதற்கு முன்பெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்க தேவையில்லை. ஆனால் தற்போது சிறிய போராட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாததால், நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கும் நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News